Tamilnadu

கிடப்பில் கிடந்த அ.தி.மு.க-வின் போலி வாக்குறுதி.. மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் அதிரடி!

கடந்த 2018-ஆம் ஆண்டு ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கால்பந்து போட்டியில், தமிழ்நாடு மகளிர் அணி தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தது. அப்போது இருந்த அ.தி.மு.க அரசு தமிழ்நாடு மகளிர் அணி வீரங்கணைக்கு ஊக்கத்தொகை மற்றும் அரசு வேலை வழங்கப்பட்டும் என அறிவித்தது.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட அரசின் எந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் இந்த விவகாரத்தை சமூக ஆர்வலர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினார். மேலும் இதுதொடர்பான தகவலும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இதுதொடர்பாக உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில், “தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணிக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும்; மேலும், அணி வீராங்கனைகளுக்கு அரசு வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.வி. மெய்யநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-

தமிழ்நாடு சீனியர் மகளிர் கால்பந்து அணியினரின் கோரிக்கைத தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எடுக்க உள்ள நடவடிக்கைகள்:

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற தேசிய அளவிலான சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு மகளிர் அணியினர், 18 முறை சாம்பியன் பட்டம் வென்ற மணிப்பூர் அணியின் வெற்றிச் சாதனையைத் தகர்த்து தமிழ்நாட்டின் தங்கக் கனவை நனவாக்கியுள்ளனர். இந்தச் சாதனையை ஈட்டிய தமிழ்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசிடமிருந்து உரிய அங்கீகாரத்தை எதிர்நோக்கி உள்ளதாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

2. அரசாணை (நிலை) எண்.18, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் (எஸ்1) துறை, நாள்.29.07.2019-ன்படி, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு கீழ்க்கண்டவாறு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது:

3. தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டி 2018-ல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு மகளிர் கால்பந்து

அணியிலுள்ள வீராங்கணைகள் ஒவ்வொருவருக்கும் ரூ.1.38 இலட்சம் வீதம் மொத்தமாக ரூ.25.00 இலட்சம் தமிழ்நாடு அணிக்கு ஊக்கத்தொகையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

4. மேலும், அரசாணை (நிலை) என்.6, இளைஞர் நலன் (மற்றும்) விளையாட்டு மேம்பாட்டுத் (எஸ்1) துறை, நாள்.20.09.2019-ன்படி, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியில் குரூப்-சி (ஊதிய விகிதம் ரூ.19,500 - 62,000 மற்றும் ரூ.35,900 - 1,13,500 இடையிலுள்ள பதவிகள்) பதவிகளில் பணி நியமனம் வழங்கப்படுகிறது. மேற்கண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியினருக்கும் அரசுப் பணி வழங்குவது குறித்து அரசின் கவனத்திற்கு சிறப்பு நிகழ்வாக எடுத்துச் செல்லப்பட்டு, உதவி புரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “எதுவும் தெரியாமல் அறிக்கை விடுவது எடப்பாடி பழனிச்சாமிக்கு வாடிக்கையாகிவிட்டது” : அமைச்சர் மா.சு சாடல்!