Tamilnadu
“கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவு செய்த இளைஞர்” : தேனி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த டேனியல் ராஜ். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 17 வயதாகும் கல்லூரி மாணவியிடம் நட்பாக பேசிவந்துள்ளார். இந்நிலையில், திருமண ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கடத்திச் சென்று பாலியல் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மாணவி கொடுத்தப் புகாரின் பேரில், பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவுற்று இளைஞர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால் இளைஞர் டேனியல் ராஜுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மூவாயிரம் ரூபாய் அபராதம், அதை கட்ட தவறினால் மேலும் 6 மாத கால மெய்க்காவல் சிறைத்தண்டனையும், மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக இரண்டு வருடகால சிறை தண்டனையும், 2000 ரூபாய் அபராதம் அதை கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதகால சிறை தண்டனை விதித்து இன்று தேனி மாவட்டம் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜே வெங்கடேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!