Tamilnadu
கரையை கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்... ’ரெட் அலெர்ட்’டை திரும்பப் பெற்றது வானிலை மையம்!
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியதாக தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நகர்ந்துவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 30 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருந்தது. அது சற்று முன்பு கரையைக் கடக்கத் தொடங்கியது.
இதையொட்டி சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்று வீசி வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை தொட்டவுடன் இரண்டு அல்லது மூன்று மணிநேரத்துக்குள் முழுவதுமாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியிருப்பதால் சென்னைக்கு விடுக்கப்பட்ட ‘ரெட் அலெர்ட்’ நீக்கப்பட்டுள்ளது.
சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த பின்னர் தொடர்ந்து வலுவிழக்கும் இதனால் தமிழ்நாடு ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிபடியாக குறைய தொடங்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!