Tamilnadu

வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் சேய்.. பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக்குழு!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வேற்று வலுப்பெற்று சென்னை அருகே நகர்ந்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாகப் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாகச் சென்னையில் நேற்று மதியத்திலிருந்தே விடாமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும் இன்று காலையிலிருந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதையடுத்து வெள்ளத்தில் சிக்கியவர்களை மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், போலிஸார், பேரிடர் மீட்புக்குக் குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்து வருகிறார்கள்.

இந்நிலையில், சென்னை பெரும்பாக்கம், இந்திரா நகர் ஏரியை ஒட்டிய பகுதியில் மழைகாரணமாக குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கியவர்களைப் பத்திரமா மீட்டு நிவாரண முகாம்களில் தங்கவைத்துள்ளனர்.

அப்போது பிறந்து சில நாட்களேஆன குழந்தை மற்றும் அவரது தாயைப் பேரிடர் மீட்புக்குழுவினர் நாற்காலியில் அமரவைத்து பத்திரமாக மீட்டனர். பின்னர் தாய் மற்றும் சேயை அருகே உள்ள முகாமில் தங்கவைத்து உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.

Also Read: 45 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்; வெளியே யாரும் வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை!