Tamilnadu
”நிதியை ஏப்பம் விட்ட எஸ்.பி.வேலுமணி... விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
“முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சி துறையின் சார்பாக பணிகள் எதுவுமே நடைபெறவில்லை. இதுகுறித்து உரிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கசென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கனமழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யச் செல்லும் வழியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
செய்தியாளர் கேள்வி : நீங்கள் நிறைய பகுதிகளுக்கு சென்று கொண்டிருக்கிறீர்கள், நிலைமை எப்படியிருக்கிறது?
முதலமைச்சர் பதில்: மழையால் பாதிக்கப்பட்டு தண்ணீர் தேங்கியிருக்கும் இடங்களில் எல்லாம் அரசாங்கம் சார்பாகவும், கட்சி சார்பாகவும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உணவு வசதி, தங்குவதற்கான ஏற்பாடு, மருத்துவ முகாம்கள் போன்ற எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கிறோம்.
கேள்வி: Water-logging பிரச்சனை சிறிது குறைந்திருக்கிறதா?
பதில்: ஓரளவுக்கு குறைந்திருக்கிறது, முழுமையாக குறையவில்லை. ஏனென்றால், ஏற்கனவே முந்தைய ஆட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்று போட்டு, அதில் பல கோடி ரூபாய் ஒன்றிய அரசிடமிருந்து நிதி வாங்கி, என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் நடந்த உள்ளாட்சித் துறையின் சார்பாக பணிகள் எதுவுமே நடைபெறவில்லை, கமிஷன் மட்டும் வாங்கியிருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும், நாங்கள் சமாளித்து பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். இப்பணிகள் முடிந்த பிறகு, இதுகுறித்து உரிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.
கேள்வி : இதெல்லாம் முடிந்தபிறகு அந்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில் : நிச்சயமாக, உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!