Tamilnadu
“குடிபோதையில் பக்கத்து வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த அதிமுக முன்னாள் எம்.பி” : போலிஸார் வழக்கு பதிவு!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நீலகிரி தொகுதி மக்களவை எம்.பி.,யாக கோபாலகிருஷ்ணன் இருந்தார். இவர் நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மது போதையில், முத்தாலம்மன் பேட்டை பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்குள் வெறும் உடம்புடன் நுழைந்துள்ளார்.
உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் முன்னாள் எம்.பி-யை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர் நிர்வாணமாக இருப்பதை வீடியோ பதிவு செய்துள்ளனர். உடனடியாக குன்னூர் நகர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். முன்னாள் அ.தி.மு.க எம்.பி கோபாலகிருஷ்ணன் தன்னை தாக்கியதாக கூறி இன்று குன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து இருவரையும் விசாரணை நடத்திய காவல்துறையினர் வீட்டிற்குள் குடிபோதையில் தகாத வார்த்தை பேசிய முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் மீதும், அவர் மீது தாக்குதல் நடத்திய வீட்டின் உரிமையாளர் கோபி மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். அ.தி.மு.க முன்னாள் எம்.பி மது போதையில் அடுத்தவரின் வீட்டிற்குள் முழு நிர்வாணமாக இருந்த சம்பவம் நீலகிரி அ.தி.மு.க.,வில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
இம்மானுவேல் சேகரனாரின் பெரும்புகழ் வாழ்க : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி : விஜய்யின் முகத்திரையைக் கிழித்த முரசொலி!
-
போராளிக்கான தழும்பு...! விஜய்யின் 'மிசா' குறித்த விமர்சனத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி