Tamilnadu
"355 விக்கெட் எடுத்த ஷமி எங்க.. ஒத்த ஓட்டு வாங்குன பா.ஜ.க எங்க" : மைதானத்தில் பதிலடி கொடுத்த ரசிகர்!
T20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் முதல்போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா தோல்வியடைந்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதையடுத்து இந்திய வீரர்களை சமூக வலைத்தளங்களில் பலர் திட்டத்தொடங்கினர்.
பாகிஸ்தானுடனான தோல்விக்கு முகமது ஷமி தான் காரணம் எனவே அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என அவரது மதத்தைக் குறிப்பிட்டு பலரும் அவதூறு கருத்துக்களைப் பரப்பினர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பலரும் முகமது ஷமிக்கு ஆதரவாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின்போது இந்திய ரசிகர் ஒருவர் மைதானத்தில்,"முகமது ஷமி இந்தியாவிற்காக 355 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
ஆனால், பா.ஜ.க மொத்த ஓட்டு 1 (ஒத்த ஓட்டு பா.ஜ.க)" என்ற வாசகம் கொண்ட பதாகையை ஏந்தி இந்திய வீரர் முகமது ஷமிக்கு எதிராகக் கருத்து பரப்பியவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் முகமது ஷமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!