Tamilnadu
“வடிகால் அடைப்பை அகற்றி மழைநீரை வடிய செய்த காவலர்கள்” - போலிஸாரின் உடனடி நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு!
சென்னையில் நேற்றில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் ஆங்காங்கே சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி சாலையை சீரமைத்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோட்டூர்புரம் சர்தார் பட்டேல் சாலையில் மழைக் காரணமாகச் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அப்போது ரோந்து பணியிலிருந்த போலிஸார் மழை நீர் வடிகால் வாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்தனர்.
உடனடியாக போலிஸார் ராஜேஷ் மற்றும் மகாதேவன் ஆகியோர் மரத்தின் குச்சிகளை உடைத்து கால்வாய் அடைப்புகளை தாங்களே சரிசெய்தனர். அப்போது சாலையிலிருந்த வாகன ஓட்டிகள் போலிஸாரின் இந்த துரித நடவடிக்கைக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும், கால்வாய் அடைப்பை அகற்றிய போலிஸார் இந்த சாலையை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Also Read
-
பொத்தென்று மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்... கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி! - video
-
“பழனிசாமியின் முகவர்... அதிமுகவின் B டீம்...” - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!
-
தமிழ்நாடு அரசின் Iconic Projects... அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு... விவரம்!
-
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!