Tamilnadu
“நண்பனின் பிறந்தநாளில் கொண்டாட்டத்தின்போது இடிதாக்கி கல்லூரி மாணவன் பலி” : விழுப்புரத்தில் நடந்த சோகம்!
ராணிப்பேட்டை தாலுக்கா வளவனூர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் நித்திஷ். இவர் வந்தவாசி தாலுக்கா தென்னாங்கூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை கணிதம் படித்து வருகிறார்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை அடுத்த இராவணம்பட்டு கிராமத்தில், நித்தீஷ் உடன் பயிலும் நண்பன் தக்ஷிணாமூர்த்தியின் பிறந்தநாளுக்கு நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட வருகை தந்து, பிறந்த நாளுக்காக நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பெய்த மழையால் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பிரியாணி மழையில் நனையாமல் இருக்க தார்பாய் பிடித்துள்ளனர். அப்போது திடீரென தாக்கிய இடி மின்னலால் நித்திஷ் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் இருந்த நண்பன் தினேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அவலூர்பேட்டை போலிஸார், வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பன் பிறந்தநாளில் கொண்டாட்டத்தின்போது இடிதாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!