Tamilnadu
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு.. விதிமுறைகளை மீறிய எஸ்.ஐ உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்: என்ன நடந்தது?
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி உறவினர்களை சந்திக்க அனுமதி வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை 20.10.21 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் திரும்பினர். வரும் வழியில் விதிமுறைகளை மீறி கைதிகளை, அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இதுதொடர்பாக சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்தி ஆகிய 7 பேரை சஸ்பெண்ட் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணைக்கும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
-
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
-
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
-
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு
-
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !