Tamilnadu
“உள்ளாட்சி தேர்தலில் தோல்வி.. பாமக-வினர் தாக்கியதில் ஒருவர் கவலைக்கிடம், 7 பேர் படுகாயம்” : நடந்தது என்ன?
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். முன்னாள் பா.ம.க மாவட்ட செயலாளராக இருந்த குமரவேல் நடந்து முடிந்த ஊராட்சிமன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியுற்றார்.
இவரின் தோல்விக்கு தே.மு.தி.க கட்சியை சேர்ந்த அச்சரப்பாக்கம் ஒன்றிய அவைத்தலைவர் பெருமாள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தலில் தோல்வியுற்ற குமரவேல் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் அன்பழகன், ஜானகிராமன், பிரசாந்த், முருகன், சண்முகம், பூமிநாதன், தாமோதரன், சரவணன், மோகன், அசோக் குமார், அருணகிரி மற்றும் 15க்கும் மேற்பட்ட அடிகளைக் அழைத்துச் சென்று பெருமாள் மீது சென்றுள்ளார்.
அப்போது பெருமாளின் ஆதரவாளர்கள் செல்லக்கண்ணு துரை, ஆனந்தன் மணிமாறன் ராமன், மோகன் ஆகிய ஏழு பேரை தேசிய நெடுஞ்சாலையில் பஜார் வீதியில் கொலைவெறி தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஏழு பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மணிமாறன் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் பா.ம.க முன்னாள் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமறைவாகியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
Also Read
-
வரி விதிப்பு விவகாரம் : “வராக்கடன் விதிமுறைகளை தளர்த்த வேண்டும்” - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்!
-
“Oxford பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் திருவுருவப்படம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“கழகத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து, 13 முறை சிறை சென்றவர் குளித்தலை அ.சிவராமன்” : முதலமைச்சர் இரங்கல்!
-
ராகுல் பயணம் : “பீகாருக்கான எழுச்சி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கான எழுச்சி” - முரசொலி தலையங்கம்!
-
“திராவிட மாடல் ஆட்சி ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு பொற்காலம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!