Tamilnadu

“7.5% இட ஒதுக்கீட்டில் 5970 அரசு பள்ளி மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ப்பு”: அமைச்சர் பொன்முடி பேட்டி!

7.5% இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.பொறியியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 25ம் தேதி துவங்குகிறது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி,”தமிழ்நாட்டில் அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீடுதான் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பொறியியல் படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு மூலம் 5,970 அரசு பள்ளி மாணவர்கள் இதுவரை சேர்ந்துள்ளனர். மேலும் இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டால் அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொறியியல் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது.

பயோடெக்னாலஜி படிப்பிற்கு நிதி ஒதுக்கக் கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த படிப்பிற்கும் 69% இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே மாணவர் சேர்ந்த இந்த ஆண்டே நடத்தப்படும். மேலும் ஒன்றிய அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இந்த படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: வன்முறையை தூண்டும் வகையில் கொச்சை பேச்சு.. யூ டியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது - நடந்தது என்ன?