Tamilnadu
சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்: 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டனன் என்பவர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதன் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதனைப் பயன்படுத்தி சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். சிறுமியும் அச்சம் காரணமாக பெற்றோரிடம் செல்லாத நிலையில், சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டறிந்து பெற்றோர் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமி நடந்தவற்றைக் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மணிகண்டனின் பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நேற்றைய தினம் இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி அளித்த அந்த தீர்ப்பில் மணிகண்டனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டனர். இதனையடுத்து குற்றவாளி மணிகண்டன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!