Tamilnadu

பா.ஜ.கவில் புதிய பொறுப்பு கிடைத்த அன்றே நீதிமன்றம் வைத்த ஆப்பு... எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்!

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசிய பா.ஜ.க தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடந்த 2018ஆம் ஆண்டில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாகப் பேசிய வழக்கில் எச்.ராஜாவுக்கு பிடிவராண்ட் உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாக விருதுநகரைச் சேர்ந்த நபர் பஜார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து அந்த வழக்கானது விருதுநகர் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாததால் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பரம்வீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே திருமயம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது நீதிமன்றத்தை விமர்சித்துப் பேசியது தொடர்பான வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஐகோர்ட்டை திட்டிய விவகாரம்: முன் ஜாமின் மனு தள்ளுபடி - விரைவில் கைதாகிறாரா எச்.ராஜா?