Tamilnadu
“இனி உங்களுக்கு சுமையாக இருக்கமாட்டேன்” : விரக்தியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை - அம்பத்தூரில் சோகம்!
சென்னை அடுத்த அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி. மூதாட்டியான இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ரோஸ்மேரிக்கு சில மாதங்களுக்கு முன்பு மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதற்காகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டு வேலை எதுவும் செய்ய முடியாததால் மூதாட்டியான ரோஸ்மேரிக்கு அரவது மகள் தினமும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த ரோஸ்மேரி தனது பிள்ளைகளிடம் “நான் உங்களுக்கு பாரமாக இருக்கிறேன்” என சொல்லி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மூதாட்டி தீவைத்து தற்கொலை செய்து கொண்டர். இது குறித்து பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்கள் போலிஸிக்கு தகவல் கொடுத்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து உறவினர்களிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?
-
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள் : தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!