Tamilnadu
“குறை இருந்தால் சொல்லுங்கள்..” : கிராம சபைக் கூட்டத்தில் சகஜமாக கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்த போது பொதுமக்கள் அவரை கைதட்டி உற்சாக வரவேற்று அளித்தனர்.
பின்னர் பொதுமக்கள் தங்கள் ஊராட்சிக்குத் தேவையான கோரிக்களை முன்வைத்து பேசினர். ஒவ்வொருவரின் கோரிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களோடு மக்களாக அமர்ந்து கேட்டுக்கொண்டு அவர்களுக்குப் பதில் அளித்தார். அப்போது தி.மு.க அரசின் நான்கு மாத ஆட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்றும் மக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் தி.மு.க அரசின் செயல்பாட்டில் குறையிருந்தால் சொல்லுங்கள்.. அப்பத்தான் சரி செய்ய முடியும் என முதலமைச்சர் கூறியபோது பொதுமக்கள் அனைவரும் சிறப்பான ஆட்சியாக இருக்கிறது என தெரிவித்தனர். இதையடுத்து மதுரை பாப்பாபட்டியில் அங்கன்வாடி கட்டிடம், நியாயவிலைக்கடை மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவை கட்டித்தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தியாவே பாராட்டும் வகையில் தலைசிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் கூறினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!