Tamilnadu
“ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தங்கக்காசு - செல்போன் பரிசு”: தடுப்பூசி முகாமில் அசத்தல்!
தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், 3வது மெகா தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு முதலாம் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் நகரில் உள்ள 48 வார்டுகளில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களில் தடுப்பூசி போடுகின்ற அனைவருக்கும் திண்டுக்கல் நகரில் உள்ள பிரபல துணிக்கடை ரூ.100 ரூபாய்க்கான கூப்பனும், அதேபோல் தனியார் நிறுவனமும் ரூ.100க்கான கூப்பன் வழங்குகின்றனர்.
மேலும் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல் தவணை தடுப்பூசி போடும் பொதுமக்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில், முதல் பரிசாக ஒரு கிராம் தங்ககாசு மூன்று நபர்களுக்கும், இரண்டாவது பரிசாக அழகிய செல்போன் 5 நபர்களுக்கும், மூன்றாம் பரிசாக பட்டுப்புடவை ஐந்து நபர்களுக்கும், நான்காம் பரிசாக ரூ.2000 மதிப்புள்ள பேக் 15 நபர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து தடுப்பூசி போட்டு செல்கின்றன. மேலும் இத்தகைய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!