Tamilnadu
தகாத உறவால் நேர்ந்த கொடூரம்... சிறுமியை அடித்து ஆற்றில் வீசி கொலை: தஞ்சையில் பயங்கரம்!
தஞ்சாவூர் மாவட்டம், கோரிகுளத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. கணவரை இழந்த இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இதையடுத்து உறவினர் வெற்றிவேல் என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லணை கால்வாய் பகுதியில் சிறுமியின் சடலம் ஒன்று கரை ஒதுங்கி இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்குச் சென்ற போலிஸார் சிறுமியின் உடலை மீட்டு பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிறகு இவர் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் இந்த சிறுமி விஜயலட்சுமியின் மகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
விஜயலட்சுமிக்கும், உறவினர் வெற்றிவேலுக்கும் நீண்ட நாட்களாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உறவுக்கு விஜயலட்சுமியின் குழந்தைகள் இடையூறாக இருந்துள்ளனர். இதனால் சம்பவத்தன்று சிறுமியை அடித்து கொலை செய்துள்ளார் வெற்றிவேல்.இதற்கு விஜயலட்சுமியும் உடந்தையாக இருந்துள்ளார்.
பிறகு யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காகச் சிறுமியின் உடலைக் கல்லணை கால்வாயில் வீசியுள்ளார். இது குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மின்துறை வெள்ளை அறிக்கை : உண்மையை திட்டமிட்டே மறைத்த த.வெ.க அமைச்சர்... அம்பலப்படுத்திய செந்தில் பாலாஜி!
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!