Tamilnadu
ஓட்டிக் கொண்டிருக்கும் போதே தீப்பிடித்த ஆம்னி கார்; கோடம்பாக்கம் அருகே நடு ரோட்டில் நடந்தது என்ன?
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இன்று காலை சென்று கொண்டிருந்த ஆம்னி கார் ஒன்றில் இருந்து கரும்புகை வெளியேறியது. அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுனர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி பார்த்தார்.
அப்போது காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இது தொடர்பாக தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அசோக் நகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி ரமேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் காரின் முன்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசமானது.
தகவல் அறிந்து கோடம்பாக்கம் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். காரை ஓட்டி வந்தவர் மணிகண்டன். கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் மொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்து கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள கடைகளுக்கு காய்கறிகளை சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிந்தது.
இன்று காலையும் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு சிறிது தூரம் சென்றதும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த தீவிபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்