Tamilnadu
“சென்னை முதல் குமரி வரை ‘சமூகநீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு” : தந்தை பெரியாருக்கு மகுடம் சூட்டிய முதலமைச்சர்!
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா இன்று (செப். 17) கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை “சமூகநீதி நாள்” என அறிவித்து அரசாணை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக மக்கள் கடைபிடித்து வருகின்றனர். மேலும் தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
அதுமட்டுமல்லாது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த “சமூகநீதி நாள்” உறுதிமொழியையும் எடுத்துவருகின்றனர். மேலும் சம கல்வி, பெண்கள் முன்னேற்றம், சுயமரியாதை, கலப்புத்திருமணம், தீண்டாமை எதிர்ப்பு, மூட நம்பிக்கைகள் எதிர்ப்பு நிலை, கைம்பெண் மறுமணம் என தந்தை பெரியாரின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பிற்கு முன்னதாக தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், அரசு துறைச் செயலாளர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
“தமிழ்நாட்டின் சாபக்கேடு எச்.ராஜா” : அமைச்சர் சேகர்பாபு கடும் தாக்கு!
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!