Tamilnadu
“அனைத்து திட்டங்களையும் விரைந்து செயல்படுத்துங்க... வாரம் ஒருமுறை ஆய்வு செய்வேன்” - முதலமைச்சர் அதிரடி!
“மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். வாரம் ஒருமுறை புதிய திட்டங்களை ஆய்வு செய்வேன்” என அனைத்துத் துறை செயலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்து அனைத்துத் துறை செயலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். அறிவிப்புகளை செயல்படுத்தும்போது வழக்குகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு.
சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறை வாரியாக, மாதம் இரண்டு முறை நானே நேரடியாக ஆய்வு பணிகளை மேற்கொள்வேன் எனக் கூறியுள்னேன். அமைச்சர்களை மட்டுமல்ல ஒவ்வொரு துறை செயலாளர்களையும் நேரடியாக கண்காணிப்பேன் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அரசின் புதிய திட்டங்கள், தகவல்கள் அனைத்தும் அரசின் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும். இணையதளத்தின் ஆன்லைன் தகவல் பலகை எனப்படும் டேஷ்போர்டில் தினந்தோறும் அதுகுறித்த தகவல்கள் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு அறிவிப்பையும் செயல்படுத்த கால அளவை நிர்ணயித்து அதற்குள் செயல்படுத்துங்கள்.
திட்டங்களின் நிலையை வாரந்தோறும் ஆய்வு செய்வேன். அனைத்து துறையும் ஒருசேர முன்னேற்றம் கொள்ள வேண்டும். அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, திட்டங்கள் காலதாமதம் ஆகாமல் செயல்பட முடியும்.
எனவே, சம்பந்தப்பட்ட துறையின் செயலர்கள், வேறு துறை சார்ந்த பணிகளையும், மக்கள் பணிகள், அரசின் பணிகள் என எண்ணி செயல்பட வேண்டும்.
இதன் மூலம் திட்டங்கள் செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மாற வேண்டும். அறிவித்த திட்டங்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களை சென்று சேர வேண்டும். ஒவ்வொரு துறையும் முன்னேற வேண்டும். திட்டங்கள் மூலம் அனைத்து மாவட்ட மக்கள் மற்றும் சமூக வளர்ச்சி ஏற்பட வேண்டும்.” என அறிவுறுத்தியுள்ளார்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!