Tamilnadu
ரவிசங்கர் பிரசாத்துக்கும் ஆளுநர் ரவிக்கும் வித்தியாசமே தெரியாமல் போஸ்டர் அடித்த பா.ஜ.க துணைத் தலைவர்!
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தார். அதேபோல், ஆளுநரை வரவேற்பதாக பா.ஜ.கவினர் செய்த கூத்து இணையவாசிகளிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழ்நாட்டுக்கு ஆளுநராக நியமிகப்பட்டுள்ள ஆர்.என்.ரவி யார் என்றுகூட முழுவதுமாக படிக்காமல் போறகிறபோக்கில் வாழ்த்துக் கூறி, இணையவாசிகளிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
கட்சியின் மூத்த நிர்வாகியே இப்படி என்றால் கீழ்மட்டத்தில் உள்ள நிர்வாகிகளை சொல்லவா வேண்டும்? எச்.ராஜாவாவது, IPS என்பதற்கு பதிலாக IAS எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மற்றோரு நிர்வாகியோ ஆளையே மாற்றி, முன்னாள் ஒன்றிய அமைச்சரை வரவேற்று போஸ்டர் அடித்துள்ளார். பா.ஜ.கவின் மாநிலத் துணைத் தலைவராக உள்ள மஹாலட்சுமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார்.
அதில், தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்கும் மேதகு. ரவிசங்கர் பிரசாத் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம் எனக் குறிப்பிட்டு, AR.மஹாலட்சுமி., B.L.M, M.A, M.B.A, M.PHIL, R.B.P என தான் பெற்ற நீண்ட பட்டங்களையும் போட்டுள்ளார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் இவ்வளவு படிப்பு படித்தும் சரியான புரிதலின்றி பொய்ச் செய்தியை, முகநூலில் இப்படி பதிவிடுதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!