Tamilnadu

திருப்பரங்குன்றத்தில் கல்லூரி அமைக்கக் கேட்ட அதிமுக : தரவுகளுடன் பதிலடி கொடுத்த அமைச்சர் பொன்முடி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தொடரின் போது வினாக்கள் விடைகள் நேரத்தின்போது, திருப்பரங்குன்றத்தில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 25 விழுக்காடு கூடுதல் இட ஒதுக்கீடு செய்துதர வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதில் அளித்து பேசியதாவது,

”திருப்பரங்குன்றம் தொகுதி அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் 3 அரசு கலை கல்லூரிகளில் 21 சுயநிதி கல்லூரிகளும் 12 பொறியியல் கல்லூரிகளும் 17 பலவகை பொறியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரிகளில் 10,439 காலிப் பணியிடங்கள் உள்ளது. இக்கல்லூரிகளில் ஏற்கனவே காலிப்பணியிடங்கள் உள்ளதால் திருப்பரங்குன்றத்தில் புதிய கலை அறிவியல் கல்லூரி துவங்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.

மேலும் தற்போது போடப்பட்ட அரசாணையின் படி அரசு கல்லூரிகளில் 25 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகளை பொறுத்தவரையில் மாணவர் சேர்க்கைக்கான ஒதுக்கீடு என்பது 10 விழுக்காடாக உள்ளது. இதனை 15 விழுக்காடாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” எனக் கூறியுள்ளார்.

Also Read: “நாங்களும் அதைத்தான் சொல்றோம்; நன்றி.. போய்ட்டு வாங்க” : நயினார் நாகேந்திரனை கலாய்த்த சபாநாயகர்!