Tamilnadu

“ஆப்கன் மத்திய வங்கி ஆளுநராக ஹாஜி முகமது இட்ரிஸ்” - ‘கோவை பிரதர்ஸ்’ பாணியில் ஆள் பிடிக்கும் தாலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர்.

பேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அரங்கேறியது. இந்நிலையில் மீண்டும் தங்களது நாட்டு மக்களுக்கு தாலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில், தாலிபான் ஆப்கானிஸ்தானில் அரசு கட்டமைப்பை நிறுவதற்காக முயற்சியில் இறங்கி சிறப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு யார் யாருக்கு எந்தப் பதவிகள் வழங்குவது போன்ற பரிந்துரைகளை வழங்கியிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் பிரதமர் மற்றும் அமைச்சரவை பட்டியலை வெளியிட்டது தாலிபான்கள் அமைப்பு.

அந்த குழுவின் பரிந்துரையின்படி, ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமராக முல்லா ஹசன் அகுந்த் அறிவிக்கப்ட்டுள்ளார். இதில், முல்லா அப்துல் கனீ பரதர், மெளலவி அதுல் சலாம் ஹனாஃபி துணைத் தலைவராக இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் ஆளுநராக ஹாஜி முகமது இட்ரிஸ் நியமிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கான் மத்திய வங்கியின் தற்காலிக ஆளுநராக ஹாஜி முகமது இட்ரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஜோஸ்ஜானைச் சேர்ந்தவர் மற்றும் தாலிபான் பொருளாதார ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார். இவரை வங்கியின் ஆளுநராக நியமித்ததற்கு தாலிபான் அமைப்பில் உள்ள பலருமே கண்டனம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Also Read: “பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ள முல்லா ஹசன் ஆப்கான் பிரதமராக நியமனம்” : யார் இந்த முல்லா ஹசன்?