Tamilnadu
'சோறுபோடாமல் அடித்து துன்புறுத்தும் மகன்'- சொத்தை மீட்டுத்தர கோரி கண்ணீர் விடும் தந்தை: நடந்தது என்ன?
திருவண்ணாமலை மாவட்டம், சித்தனகால் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ரேவதி. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.
இதனால் கிருஷ்ணன் மற்றும் ரேவதி ஆகியோர் இளைய மகன் சூரிய பிரகாஷ் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணன் பெயரிலிருந்த 3 ஏக்கர் 25 செட் நிலத்தை மகன் சூரிய பிரகாஷ் தந்தையை மிரட்டி தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார்.
இதையடுத்து வயதான பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் துன்புறுத்தி வந்துள்ளார். பின்னர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தாய் ரேவதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து தந்தை கிருஷ்ணனை,மகன் சூரியபிரகாஷ் வீட்டில் பூட்டிவைத்து உணவு கொடுக்காமல் அடித்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த அவர், என்னை மிரட்டி எழுதிவாங்கிய தன்னுடைய நிலத்தினை மீட்டுத் தரவேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். இவரின் மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். பெற்ற தந்தைக்குச் சோறுபோடாமல் வீட்டில் அடைத்து மகன் கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தவெக ஆட்சிக்கு வந்து 3 மாதம் ஆச்சு.. ஒரு திட்டமும் இல்லை.. நிதியும் ஒதுக்கல” : கே.என்.நேரு காட்டம்!
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!