Tamilnadu
காதலியை திருமணம் செய்யவிருந்த மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு: விசாரணையில் பகீர் வாக்குமூலம் - நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம்.நகர் அருகே உள்ள ஆயிஷா-பி நகர் பகுதியை சேர்ந்தவர் ஷமீல் அஹமத். இவர் தனியார் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 17ம் தேதி தொழிற்சாலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் வீட்டின் அருகாமையில் நண்பர்களுடன் பேசுவதற்காக அப்பகுதியில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த ஆசிட்டை ஷமீல் அஹமத் மீது வீசி விட்டு சென்றுள்ளார்.
உடனடியாக முகம் மற்றும் தோள்பட்டை பகுதியில் ஆசிட் விழுந்து படுகாயமடைந்த விழுந்த ஷமீல் அஹமது அங்கிருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து ஆம்பூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 5 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர்.
இந்நிலையில், ஷமீல் அஹமத் உடன் சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு 22 அன்று திருமண நடைபெற்று முடிந்தது. மேலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த சுபேர் அஹமது என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடந்தினார்கள். அந்த விசாரணையின் போது, “என்னுடைய உறவினர் பெண்ணை நான் காதலித்து வந்தேன். ஆனால், உறவினர்கள் மூலம் ஷமீல் அஹமது திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டனர்.
இதனால் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக நான் ஷமீல் அஹமத் மீது பேர்ணம்பட்டு ஒர்க் ஷாப்பில் இருந்து கேன் மூலம் ஆசிட் பெற்றுக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக பின்தொடர்ந்து, பின்னர் 17ம் தேதி அவர் மீது வீசி விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து விட்டேன்” என்று காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
4,184 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை!
-
ஐசிசி தரவரிசைப் பட்டியல்… 5 ஆண்டுகளுக்கு பிறகு ‘நம்பர் 1’ இடத்தில் விராட் கோலி! : முழு விவரம் உள்ளே!
-
288 Iconic Projects : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்!
-
கம்பீரின் ஆதரவால் அணிக்குள் வந்தாரா ஆயுஷ் பதோனி? - கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொந்தளிப்பு!
-
சென்னையில் 1980-களை நினைவுபடுத்தும் ‘VINTAGE BUS’! - மக்கள் பயன்பாட்டிற்காக 5 பேருந்துகள் அறிமுகம்!