Tamilnadu
“2 மாடிக்கு மேல் வீடு கட்டினால் லிஃப்ட் கட்டாயம்” : மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசின் அறிவிப்புகள்!
இரண்டு மாடிகளுக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு லிஃப்ட் வசதி கட்டாயம் என நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதம் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிள் நலத்துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்வசம் வைத்துள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அறிவிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், தமிழகத்தில் இரண்டு அடுக்குகளுக்கு மேல் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் மின்தூக்கி (Lift) உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் லிஃப்ட், சாய்தள மேடை, சிறப்பு கழிப்பறை கட்ட வேண்டும்.
பார்வையற்றோருக்கான அறிவிப்பு பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகள் செய்யப்பட வேண்டும்.
கட்டடங்கள், போக்குவரத்து, இணையதளங்கள் ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகள் அணுக தடையில்லா உட்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!