தமிழ்நாடு

"அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை" : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

"அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை" : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று தஞ்சாவூர் தி.மு.க எம்.எல்.ஏ நீலமேகம் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

அப்போது பேசிய அவர், “கடந்த காலத்தில் சென்னை அண்ணாசாலையில் முறையான அனுமதி பெற்று முத்தமிழறிஞர் கலைஞருக்கு சிலை வைக்கப்பட்டது. ஆனால் எக்காரணத்திற்காக சிலை அகற்றப்பட்டது என்று நான் சொல்லத் தேவையில்லை.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை அண்ணா சாலையில் முன்பு இருந்த அதே இடத்தில் கலைஞர் அவர்களுக்கு மீண்டும் சிலை அமைக்கப்பட வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார்.

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலையை அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரியிருந்தனர். சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து, அண்ணா சாலையில் ஏதாவது ஒரு இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் சிலை அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்டோருக்கு சிலை அமைந்திருக்கும் நிலையில் கலைஞர் சிலை விரைவில் அமைக்கப்படவுள்ளது.

banner

Related Stories

Related Stories