Tamilnadu
“காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் இன்று இருக்காது” : முதலமைச்சரின் நெத்தியடி பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் இன்று விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், அ.தி.மு.க எம்.எல்.ஏவுமான அன்பழகன் குற்றம்சாட்டினார்.
அவருக்கு பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் நாங்கள் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவில்லை. அவ்வாறு காழ்ப்புணர்ச்சியோடு நாங்கள் நடந்து கொண்டிருந்தால் அம்மா உணவகம் தற்போது செயல்பட்டு இருக்காது.
காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் எந்த எண்ணமும் கழக அரசுக்குக் கிடையாது. காழ்ப்புணர்ச்சியோடு செயல்படவில்லை என்று துறை அமைச்சர் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “ஜெயலலிதா பெயரை வைக்கவேண்டும் என்பதற்காகவே பல்கலைக்கழகம் பெயரளவில் மட்டுமே தொடங்கப்பட்டது. அ.தி.மு.க ஆட்சியில் பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியோ இடமோ ஒதுக்கப்படவில்லை” எனத் தெரிவித்தார்.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!