Tamilnadu

”நிதியே ஒதுக்காமல் பெருமைக்கு ஜெ., பெயரில் பல்கலை” - பேரவையில் அதிமுகவை சரமாரியாக சாடிய அமைச்சர் பொன்முடி

அதிமுக ஆட்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பெயரளவிற்கு பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டது. பல்கலைக் கழகத்திற்கு இடமோ நிதியும் ஒதுக்கப்படவில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை இன்று நடைபெற்றது. பாலக்கோடு சட்டமன்ற அதிமுக உறுப்பினரும் கேபி அன்பழகன் பேசும்போது, விழுப்புரத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகம் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருவள்ளூர் பல்கலைக்கழகத்தில் இருந்து விழுப்புரம் மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை பிரித்ததால் எந்தவித இழப்பும் கிடையாது என விழுப்புரத்தை மையமாகக் கொண்டு ஜெயலலிதா பெயரில் கடந்த ஆட்சியில் பெயரளவிற்கு மட்டுமே பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதாகவும் அதற்கு நிதி , இடம் என எந்தவித அடிப்படை வசதிகளையும் கடந்த ஆட்சியில் செய்யவில்லை எனவும் இதனை நிரூபிக்க தயாராக எனவும் பதில் அளித்து பேசினார்.

Also Read: “அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: ஆ.ராசா பெருமிதம்!

மேலும் பல்கலைக்கழகங்கள் உருவாக்குவதால் மட்டும் கல்வியின் தரத்தில் எவ்வித உயர்வும் ஏற்படாது என மறைந்த அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா தெரிவித்துள்ளதாக கூறினார். ஒரே பல்கலைக்கழகம் இருப்பதன் மூலம் உயர்தர மற்றும் சிறப்பான கல்வியை அளிக்க முடியும் எனவும் தெரிவித்தார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தை பிரித்ததால் அதனோட வலிமை இழந்து விட்டதாகவும் எனவே 100 ஆண்டு புகழ்மிக்க அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் விழுப்புரம் மயிலாடுதுறை கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தடுக்க வில்லை எனவும் இதே சென்னையில் ஜெயலலிதா பெயரில் மீன்வளக் கல்லூரி மற்றும் இசைக் கல்லூரியில் ஜெயலலிதா பெயரில் நடைபெற்று வருவதாகவும் ஆனால் விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான அறிவிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இடம், நிதி உள்ளிட்ட எந்தவித ஒரு வசதியுமே கடந்த ஆட்சியில் செயல்படுத்த வில்லை என குற்றம் சாட்டினார்.

Also Read: “காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டிருந்தால் அம்மா உணவகம் இன்று இருக்காது” : முதலமைச்சரின் நெத்தியடி பதில்!