தமிழ்நாடு

“அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: ஆ.ராசா பெருமிதம்!

இந்தியாவிலுள்ள மாநில முதலமைச்சர்களிலேயே சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருவதாக, நீலகிரி எம்.பி ஆ.ராசா பெருமிதம்.

“அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: ஆ.ராசா பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பூர் மாவட்டம் அவிநாசி, சேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மக்கள் நல திட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டது.

அதன்படி திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட நம்பியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த கட்டிட வளாகத்தினையும், தண்டுக்காரன்பாளையம் மற்றும் ஆலத்தூர் அரசு சுகாதார நிலையத்தில் தலா 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்களையும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் அவிநாசி அரசு பொது மருத்துவமனையில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 160 கிலோ வோல்ட் திறன் கொண்ட மின்னாக்கியினை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கினர்.

முன்னதாக சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8 லட்சம் மதிப்பீட்டில் சித்த மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

அவிநாசி அரசு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் குளிர்சாதன பெட்டி வழங்குதல், முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் என 2.26 மதிப்பீட்டு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி, “ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திறம்பட செயல்பட்டு கொரானா நோய் பரவலை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்தியுதடன், மக்களுக்கான திட்டங்களை பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை தொடர்ந்து செய்து வருகின்றது.

திறமையான அரசாகவும் அதனை நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் திறமையான முதலமைச்சராகவும் இந்திய மாநில முதலமைச்சர்களிலேயே சிறந்தவராகவும் உள்ளார். ஏழை எளிய கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கல்வி, மருத்துவம், சுகாதாரம், அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தி.மு.க அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்தார்.

“அடித்தட்டு மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக உழைத்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: ஆ.ராசா பெருமிதம்!

இந்நிகழ்ச்சிக்குப்பின், அவிநாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகிய இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தனர்.

banner

Related Stories

Related Stories