Tamilnadu

“ஓணம் கொண்டாடச் சென்றவர் திரும்பி வந்ததும் மரணம்” : வங்கி மேலாளர் தற்கொலையால் நாமக்கல்லில் அதிர்ச்சி!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சனா மோகன். இவர் நாமக்கல்லில் வங்கி கிளை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்குக் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

அஞ்சனா மோகன் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நாமக்கல்லில் வேலை பார்த்து வந்த அஞ்சனா ஓணம் பண்டிகை கொண்டாட கேரளா சென்றுள்ளார்.

பின்னர், நாமக்கல் வந்த அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டியே இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது வாடகை வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அறிந்த போலிஸார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த தற்கொலை குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக அஞ்சனா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. வேறு காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Also Read: மனைவி மீது சந்தேகம்; கூலிப்படையை ஏவி வாலிபர் கடத்தல் : சென்னை → திருச்சி → கேரளா நடந்த பகீர் சம்பவம்!