Tamilnadu
குடிபோதையில் தகராறு.. நண்பரே வெட்டிக்கொலை செய்த கும்பல் - காஞ்சியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!
காஞ்சிபுரம் தாலுக்கா விப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். குடி, கஞ்சா போதைக்கு அடிமையானவர் அடிதடி குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வேலை வெட்டிக்கு செல்லாமல் ஊர் சுற்றித் திரிந்துள்ளார்.
விப்பேடு மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் பிரேம்குமார் நேற்று இரவு நண்பர்களுடன் மது குடிக்கும் போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றி கை கலப்பு ஏற்பட்ட நிலையில், நண்பர்கள் குடிபோதையில் தாங்கள் வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் பிரேம்குமார் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அருகில் உள்ளவர்கள் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிஸார் பிரேம் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலைசம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காஞ்சி தாலுக்கா போலிஸார், இளைஞரை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும், இரு தினங்களுக்கு முன்பு மனைவி வீட்டார் பிரச்சனை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!