Tamilnadu
“இனி மீண்டும் பெண்களை கல்லால் அடிப்பார்கள்” : ஆப்கனின் முதல் பெண் விமானி வேதனை!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை வெளியேறிவிட்டார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டார்கள். இதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர். பேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அறங்கேறியது.
இந்நிலையில், ஆப்கனில் ஆட்சியைப் பிடித்துள்ள தாலிபான்கள், கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இஸ்லாம் விதிமுறைகளின்படி, அனைத்து உரிமைகளையும் பெண்களுக்கு வழங்குவோம் என்று கூறிவருகின்றனர்.
தாலிபான்களால் பாதிக்கப்பட்டு, பெண் கல்விக்காக குரல் கொடுத்து வரும் மலாலா தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதாகவும் தாலிபான்களுக்கு எதிராக உலக நாடுகள் செயலாற்றவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
அவரைத் தொடர்ந்து பல்வேறு பெண் செயற்பாட்டாளர்கள் தாலிபான்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில், ஆப்கனில் நடப்பதைக் கேட்கும்போது என்னால் உறங்க முடியவில்லை. எனக்கு பயமாக உள்ளது என ஆப்கானிஸ்தான் விமானப் படையின் முதல் பெண் விமானி நிலோஃபர் ரஹ்மானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிலோஃபர் ரஹ்மானி ஃபாக்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இனி வரும் காலங்களில், காபூல் மைதானத்தில் மீண்டும் பெண்கள் மீது அவர்கள் கல்லைக் கொண்டு அடிப்பார்கள். துரதிருஷ்டவசமாக எனது குடும்பம் ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டுள்ளது. அவர்கள் ஆபத்தில் உள்ளனர்.
எனது கனவுக்குத் துணையாக நின்றதற்காக அவர்கள் தாக்கப்படலாம். ஆப்கனில் நடப்பதைக் கேட்கும்போது என்னால் உறங்க முடியவில்லை. எனக்கு பயமாக உள்ளது. எனக்கு 2013ஆம் ஆண்டு முதலே தலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். நிலோஃபர் ரஹ்மானியின் கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
தி.மு.க முப்பெரும் விழா தொடங்கியது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!
-
“தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாடு மக்களை கூட்டினால் தி.மு.க!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!