Tamilnadu
சொத்துக்காக இப்படியா... குடும்பமாகச் சேர்ந்து முதியவரை அடித்துக் கொடுமை: தூத்துக்குடியில் பயங்கரம்!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ராமானுஜம் பகுதியைச் சேர்ந்தவர் ராமய்யா. முதியவரான இவரது மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து ராமய்யா தனது மகன்களுடன் வசித்து வருகிறார். இவரிடம் இருந்த ரூ.5 லட்சத்தை மகன் மற்றும் பேரன், மருமகள் ஆகியோர் வற்புறுத்தி வாங்கிக் கொண்டனர். மேலும் இவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை எழுதிக்கொடுக்குமாறு குடும்பமாகச் சேர்ந்து ராமய்யாவை அடித்துத் துன்புறுத்தி வருகிறார்கள்.
குடும்பத்தினரின் இந்த கொடுமையைத் தாங்க முடியாமல் மனமுடைந்த முதியவர் ராமய்யா தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "தன்னை அடித்து கொடுமைப்படுத்தி வரும் மகன், பேரன், மருமகள் மீது முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
முதியவரை குடும்பமாகச் சேர்ந்து அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பிப்ரவரியில் பூந்தமல்லி - வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவை தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை!” : முதலமைச்சர் கடிதம்!
-
“தமிழால் இணைவோம், தரணியில் உயர்வோம்!” : அயலகத் தமிழர் தினத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
3 நாட்கள் நடைபெற்ற சர்வதேச இளையோர் பாய்மரப் படகு சாம்பியன்ஷிப்.. வீரர்களுக்கு பரிசளித்த துணை முதலமைச்சர்!
-
“ரூ.9,500 கோடியை விடுவிக்க வேண்டும்..” - ஒன்றிய அரசின் கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது என்ன?