Tamilnadu

கோவில் நிலத்தை கூட விட்டு வைக்காத அதிமுக... ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட இந்து அறநிலையத்துறை!

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்து அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மேலும் பழமையான சிதலமடைந்த கோவில்களை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்ற வருகிறது. குறிப்பாக அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்யப்பட்டு அதிரடியாக மீட்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை பெரியக்கடை வீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை அ.தி.மு.க தொழிற்சங்கத்தினர் ஆக்கிரமித்துள்ளது அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அந்த நிலத்தில் கட்டப்பட்டிருந்த அ.தி.மு.க தொழிற்சங்க கட்டிடத்தை உரியச் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இடித்து மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட இந்த கோவில் நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: கோடநாடு வழக்கு: EPSன் தூண்டுதலால்தான் கொள்ளையே நடந்தது? பரபரப்பு வாக்குமூலம் அளித்த சயான்!