Tamilnadu
மார்டன் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்... வழிப்பறி திருடர்கள் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!
சென்னை கீழ்பாக்கம் ஆர்மஸ் சாலையில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில், பணம் எடுத்துவிட்டு வெளியே வந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்தp பெண் அதிர்ச்சியடைந்தபோது, கையிலிருந்த செல்போனைப் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
இதனையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, தனது செல்போனை ஒருவர் திருடிவிட்டுச் சென்றதாக அந்தp பெண் கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண்ணிடம் வழிப்பறியில் ஈடுபட்டது விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதாசன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கவிதாசனைக் கைது செய்த போலிஸார், அவரது கூட்டாளியான சென்னையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து தனிப்படை போலிஸார் கூறுகையில், “திருடப்பட்ட செல்போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து இருவரையும் கைது செய்தோம். அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம். கவிதாசன் சென்னையில் படித்து முடித்த பிறகு பெண் ஒருவருடன் வாழ்ந்து வாழந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு வழக்கில், கவிதாசன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த கவிதாசன், சாலையில் தனியாக செல்லும் மார்டன் பெண்களை குறிவைத்துள்ளார். அப்படி குறிவைத்து அவர்களிடம் வண்டியில் போகும்போதே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வழிப்பறியில் ஈடுபடுவதையே தனது வாடிக்கையாக வைத்துள்ளார்.
மார்டன் பெண்கள் மீது தனக்கிருக்கும் ஆசையால் இவ்வாறு செய்தாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது, தனியாக செல்லும்போது பாலியல் சீண்டலில் ஈடுபடுவதில் சிரமமாக இருந்ததால், சக்திவேலை கூட்டுச் சேர்த்துக்கொண்டு ஒருவர் வண்டி ஓட்டும்போது மற்றொருவர் என மாறி மாறி பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களும் புகார் அளிக்க தயக்கம் காட்டுவதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தொடர் பாலியல் அத்துமீறலில் இருவரும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவர்கள் மீது 7 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!