Tamilnadu
“பா.ஜ.கவை எதிர்த்தால் தொழில் செய்ய விடமாட்டோம்” : பகிரங்க மிரட்டல் விடுத்த அண்ணாமலை!
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக பா.ஜ.க அரசைக் கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவித்த அண்ணாமலை இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பா.ஜ.க ஆளும் கர்நாடக அரசிடம் பேசி இப்பிரச்னைக்கு தீர்வு காண முயலாமல் தன் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்பும் வகையிலேயே அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பதாக முன்னதாக விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று உன்ணாவிரதத்தின்போது பேசிய அண்ணாமலை, “மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு விவசாயிகூட பட்டினியால் சாகவில்லை. தமிழக அரசியலில் யாராவது பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம். மீறிப் பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம்.” என மிரட்டல் விடுத்தார்.
கர்நாடக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதாகச் சொல்லிவிட்டு, பா.ஜ.கவை எதிர்த்தால் அவர்களின் தொழிலில் கை வைப்போம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக மிரட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!