Tamilnadu
சென்டர் மீடியனில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் நடிகை யாஷிகா படுகாயம்.. மற்றொரு பெண் பலி: போஸார் விசாரணை!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில், நள்ளிரவு 1-மணியளவில் அதிவேகமாக வந்த கார் சாலையின் சென்டர் மீடியனில் மோதி அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைக் கண்ட சக வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு பூஞ்சேரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
காரில் பயணித்த பிக்பாஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்த நடிகை யாஷிகா, மற்றும் அவரது இரு ஆண் நண்பர்கள் படுகாயத்துடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் யாஷிகாவின் தோழியான ஹைதராபாத் பகுதியை சேர்ந்த வள்ளிச்செட்டி பவணி-28. என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் யாஷிகா ஆனந்தின் நண்பர் என்பதும் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடலை கைப்பற்றிய மாமல்லபுரம் போலிஸார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்பட்டதா? என மாமல்லபுரம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!
-
கடுமையான தலைவலி இருக்கிறதா?... டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன? - நிபுணர்கள் சொல்லும் தகவல் !
-
“ஹே நாங்க போலீஸ்..” கோயிலுக்கு சென்ற சிறுமி.. துப்பாக்கி முனையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - ஷாக்!
-
வந்தே மாதரம் சட்டத்திற்கு எதிரான வழக்கு : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
“ஜெம் வீரமணிக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை... நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக அரசு”: ரகுபதி பதிலடி!