Tamilnadu
“சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்” : போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
சென்னை ஆவடி அடுத்த மோரை கிராமத்தில் தம்பதி ஒருவர் தனது 17வயதில் மகளும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 16ந் தேதி சிறுமி வீட்டில் இருந்த சிறுமியைக் காணவில்லை. அவளை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, பெற்றோர் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், சிறுமியை திருமண ஆசைகாட்டி போரூர், ஆலப்பாக்கம், பாரதியார் நகர், கம்பர் முதல் தெருவைச் சார்ந்த கூலி தொழிலாளி முத்து (29) என்ற உறவினர் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, போலிஸார் இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலிஸார் மோரையில் பதுங்கி இருந்த முத்துவை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து 17வயது சிறுமியை போலிஸார் மீட்டனர். பின்னர், இருவரையும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், முத்துவிற்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில், முத்து உறவினரான சிறுமியிடம் பழகி வந்துள்ளார். பின்னர், அவரை திருமண ஆசைகாட்டி சம்பவதன்று திருப்பதிக்கு கடத்தி சென்றுள்ளார். அங்குள்ள ஒரு கோயிலில் வைத்து அவரை கட்டாய தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு, அங்கு வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதற்கிடையில், போலிஸார் தேடுவதை அறிந்த முத்து சிறுமியை மோரையில் உள்ள வீட்டிற்கு கொண்டு விட வந்துள்ளார். அப்போது முத்துவை போலிஸார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதனை அடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி போலிஸார் சிறுமி மாயமான வழக்கை போஸ்கோ சட்டத்தின் கீழ் பதிவு செய்து முத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!