Tamilnadu
நாள் முழுவதும் தொடர் சோதனை; கணக்கில் வராத ₹25 லட்சம் ரொக்கம் பறிமுதல் - கைதாகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் பேரிலும் மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்களில் பெயரிலும் தனது பணி காலத்தில் இருந்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது சம்பந்தமாக அவர்கள் மீது கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தமிழகம் முழுவதும் 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
தி.மு.க வெள்ளை அறிக்கை vs த.வெ.க வெள்ளை அறிக்கை : தி.மு.க IT WING விளக்கம்!
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!