தமிழ்நாடு

தி.மு.க அரசின் அடுத்த அதிரடி: உச்சபட்ச அச்சத்தில் EPS-OPS & Co; பட்டியலில் யார் யார்?

ஊழல் முறைகேடுகளில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் மற்ற அதிமுகவினர் உச்சபட்ச அச்சத்தில் ஆடிப்போயுள்ளனர்.

தி.மு.க அரசின் அடுத்த அதிரடி:   உச்சபட்ச அச்சத்தில் EPS-OPS & Co; பட்டியலில் யார் யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல் முறைகேடுகளும் மக்கள் மன்றத்தின் வெளிச்சம் போட்டு காட்டப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது உறுதியளதித்த தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும் அதனை செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தார்.

அதன்படி அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறையை ஊழல் துறையாகவே மாற்றியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேட்டு வழக்கு, பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, மின்சாரத்துறை அமைச்சராக இருந்த தங்கமணி மீதான ஊழல் வழக்கு, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்தியநாராயணன் மீதான நிதி முறைகேட்டு புகார் என அனைத்தின் மீதும் விசாரணைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாலியல் வழக்கில் சிக்கிய மணிகண்டன் உட்பட பல்வேறு முறைகேட்டு வழக்குகளில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து அடுத்தடுத்து எவரெல்லாம் சிக்கப்போகிறார்கள், நமக்கான குறி எப்போது வரும் என தெரியாமல் உள்ள அதிமுகவினர் திமுக அரசு முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளில் இருந்து கட்சி தலைமை காப்பாற்றாது என்பதை புரிந்துக்கொண்டு செய்வதறியாது விழிப்பிதுங்கி போயிருக்கிறார்கள்.

தி.மு.க அரசின் அடுத்த அதிரடி:   உச்சபட்ச அச்சத்தில் EPS-OPS & Co; பட்டியலில் யார் யார்?

நிலமை இப்படியாக இருக்க திமுக அரசின் நடவடிக்கைகள் எப்போது நம் மீதும் பாயும் என்ற அச்சத்திலேயே மற்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் போல எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஆடிப்போயுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க அதிமுகவை EPS OPS கொண்ட இரட்டை தலைமை நிர்வகித்து வருவது இருதரப்பு ஆதரவாளர்களிடையே பரஸ்பரம் முரண்பாடுகள் நீடித்து வருகிறது. இப்படியே மாறி மாறி அடித்துக் கொண்டே இருந்தால் அதிமுக எனும் கட்சியே தமிழ்நாட்டில் இல்லாமல் போய் விடும் என்ற சூழல்தான் நிலவும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஒன்றிய அரசில் இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எதற்குமே பயனில்லாமல் போய்விட்டதே என்ற புலம்பல்களையும் கேட்க முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories