Tamilnadu
கடனுக்கு சிகரெட் தர மறுத்த பெட்டிக்கடைக்காரை அடித்தே கொன்ற இளைஞர்கள்... மதுரையில் கொடூரம்!
மதுரை மாவட்டம், சமத்துவபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் வினோத். அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று இளைஞர்கள் வினோத்தின் கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் வினோத்திடம் கடனாக சிகரெட் கேட்டுள்ளனர். ஏற்கனவே இந்த இளைஞர்கள் கடையில் கடன் வைத்துள்ளதால், வினோத் கடனாக சிகரெட் தர முடியாது என மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் வினோத்தை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தடுப்பதிற்குள் அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பலத்த காயமடைந்திருந்த வினோத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
பின்னர், இதுபற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தி வினோத்தை தாக்கிய மூன்று இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பற்றி ‘பேச்சு - மூச்சே’ இல்லை!” : தங்கம் தென்னரசு விமர்சனம்!
-
“மாற்றம் என சொன்னது பெயர் மாற்றம் தானா?.. இதற்கு எதற்கு முதலமைச்சர்?”: வெளுத்து வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!