Tamilnadu
வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி: அதிமுக வைத்திலிங்கத்தால் கதறும் ஓய்வு பெற்ற ஆசிரியர்!
வேலை வாங்கித் தருவதாக 30 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்ததாக அ.தி.மு.க முன்னாள் எம்.பிக்கள் வைத்திலிங்கம் மற்றும் பரசுராமன் உள்ளிட்ட நான்கு பேர் மீது தஞ்சையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' துறையில் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன். இவர் தனது மாணவர் சிலருக்கு வேலை வாங்கித் தர வேண்டும் என 2018ம் ஆண்டு அ.தி.மு.க நிர்வாகி பஞ்சாபி சேஷனிடம் கேட்டுள்ளார்.
அப்போது, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பரசுராமனிடம் சிபாரிசு கடிதம் வாங்கி தருவதாகக் கூறி 15 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நான்கு இளைஞர்களிடமிருந்து 15 லட்சம் ரூபாயைப் பெற்று பஞ்சாபி சேஷனிடம் வாசுதேவன் கொடுத்துள்ளார்.
ஆனால், பணம் கொடுத்த யாருக்கும் அரசு வேலை கிடைக்கவில்லை. இதனால் வாசுதேவன் கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுக்க வேண்டும் என பஞ்சாபி சேஷனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தரமுடியாது என கூறியுள்ளார். இதனால் பணம் கொடுத்தவர்கள் வாசுதேவனிடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் இது குறித்து ஆதாரங்களுடன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையில் புகார் அளித்துள்ளார். அதேபோல், கால்நடைத்துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாக கூறி அப்போதைய கால்நடைத்துறை அமைச்சர் உடமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் பிரபுவிடம் 10 லட்சம் ரூபாய் கொடுத்தாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் பணம் கொடுத்த அன்றே முன்னாள் அமைச்சர் வைத்தியநாதன் அறையில் பத்து பேரின் நேர்முக கடிதத்தையும், 10 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்தாகவும், பணத்தை உறவினர் ராமலிங்கத்திடம் கொடுத்தாகவும் ஓய்வு பெற்ற ஆசிரியர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
ஆனால், யாருக்கும் அரசு வேலை கிடைக்காததை அடுத்துக் கொடுத்த பணத்தைத் திருப்பி கொடுக்குமாறு ராமலிங்கத்திடம் வாசுதேவன் கேட்டுள்ளார். அப்போது பணம் திருப்பி தர முடியாது என கூறி வாசுதேவனை மிரட்டியுள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசு வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!
-
100 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உலக தரத்தில் ரூ.20 கோடியில் ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
பள்ளி கட்டடம் முதல் பேருந்து நிலையம் வரை : சென்னையில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர்!
-
“இது எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல! எண்ணத்தால் உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!