Tamilnadu
"தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அதிகமான கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும்" : அமைச்சர் சேகர்பாபு உறுதி!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு," நெல்லையப்பர் கோயிலில் சிதலமடைந்து இருக்கும் மண்டபத்தைச் சீரமைக்க தொல்லியல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. அதேபோல், கருமாரி தெப்பம் முழுமையாகச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும், நெல்லையப்பர் கோவில் நவக்கிரக சந்திரன் சிலை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் உள்ள வெள்ளித் தேர் புனரமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் தேரோட்டம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் யானை காந்திமதிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுவாமி நெல்லையப்பருக்கு நடைபெற்றுவந்த மூலிகைத் தைல காப்பு நிகழ்ச்சியை உடனடியாக நடத்த அறநிலையத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு அதிகமான கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
கோவில்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம். தமிழ்நாட்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட தொன்மைவாய்ந்த கோவில்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
விமர்சனத்தைச் சகித்துக் கொள்வார்களா? ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கிறதா?: தவெக அரசுக்கு இந்து ராம் கேள்வி!
-
‘ஜனநாயகன்’ ரிலீஸ் புரமோஷனுக்காகத் தான் கர்நாடகா செல்லவே திட்டமிட்டாரா விஜய்? : முரசொலி தலையங்கம்!
-
“எவ்வளவு தமிழ் படித்தாலும் தெரியாது!” : சட்டப்பேரவையில் மரிய வில்சன் சர்ச்சை பேச்சு!
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!