Tamilnadu

“அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வதாக புகார் வந்தால் உடனே நடவடிக்கை” : அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

மதுரை கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட சுந்தர்ராஜன்பட்டி, உசிலம்பட்டி கிராமங்களில் நேற்று கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், எம்.எல்.ஏ ஆ.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்படும். கொரோனா 3-ம் அலை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றார்.

மேலும் பேசிய அவர், “அங்கீகாரமற்ற மனைகளை பதிவு செய்வதாக ஆதாரத்துடன் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக 2 சார்பதி வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட் டுள்ளனர். மாநில அளவில் டி.ஐ.ஜி, ஏ.ஐ.ஜிக்கள் என பலரும் மாற்றப்பட்டுள்ளனர். யாருடைய தலையீடும் இல்லாமல் இந்த மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

அரசு சார்பில் விடுக்கப்படும் எச்சரிக்கையை மீறி செயல் படுவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும். பத்திரப்பதிவு அலுவலகங்களில் டோக்கன் எண்ணுடன் பெயர்களையும் சேர்த்தே அறிவிக்கும்படி தெரிவிக் கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு 150 போன் அழைப்புகள் புகார் தெரிவிக்க தினமும் வரு கின்றன. உடனுக்குடன் இவற்றை சரிசெய்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ‘வார்ரூம்’ அமைக்கப்படும் : அமைச்சர் பி.மூர்த்தி பேட்டி!