Tamilnadu
“நீட் தேர்வு ரத்து தீர்மானம் யாராலும் நிராகரிக்கப்படாத வகையில் அமையும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பதே தி.மு.க அரசின் நிலைபாடு என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பது தி.மு.க அரசின் நிலைபாடு. நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி சட்டமன்றத்தில் நீட் தேர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இந்த தீர்மானத்தை ஜனாதிபதியோ அல்லது உச்சநீதிமன்றமோ யாராலும் நிராகரிக்க முடியாத வகையில் இருக்கும். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெற அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை நடத்து வருகிறது. மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கான பிந்தைய சிகிச்சை மையத்தை முதலமைச்சர் விரைவில் திறந்துவைப்பார். அதேபோல், கருப்பு பூஞ்சைக்காக தமிழ்நாடு முழுவதும் ஏழு ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.
மூன்றாவது அலை வராமல் தடுக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை வந்தால் அதை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மேலும், ஜூலை மாதத்திற்கான தொகுப்பில் தமிழ்நாட்டிற்கு 71 லட்சம் தடுப்பூசிகளாக ஒன்றிய அரசு உயர்த்தி தர இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசு... திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் !
-
விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலம்... சென்னையில் எந்தெந்த இடங்கள் வழியாக கொண்டுசெல்லலாம்... விவரம் உள்ளே !
-
அமெரிக்காவின் வரி உயர்வால் பாதிக்கப்படும் தமிழ்நாடு... ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க கி.வீரமணி கோரிக்கை !
-
டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு புதிய பொறுப்பு... தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஆணையத் தலைவராக நியமனம் !
-
தமிழ்நாட்டில் 1 லட்சம் பேருக்கு 194 டாக்டர்கள் : இந்திய சராசரியை விட இரு மடங்கு அதிகம் பெற்று சாதனை!