Tamilnadu
"கட்டுமான பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்" : அமைச்சர் எ.வ.வேலு உறுதி!
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமைப் பொறியாளர் இரா.விஸ்வநாத், தலைமை பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கட்ட கட்டுமானம் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டு, கட்டட பொருட்களின் சந்தை விலையும், பொதுப்பணிதுறை தர விலைப்பட்டியலில் உள்ள விலை வித்தியாசம், சிமெண்ட் மற்றும் கம்பி உள்ளிட்ட இதர கட்டுமானப் பொருட்களின் விலையினால் ஒப்பந்தப் பணிகள் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
பின்னர் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், "அனைத்து அரசுத் துறைகளுக்கும் கட்டட வசதி செய்து தரும் பணியை பொதுப்பணித் துறை உங்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக செய்து வருகிறது. கொரோனா காலத்தில் அரசின் வேண்டுகோளை ஏற்று மருத்துவமனைகளில் போர்க்கால அடிப்படையில் சிறப்பு பிரிவுகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் படுக்கை, ஆக்சிஜன் இணைப்பு போன்ற பணிகளை சிறப்பாக செய்து கொடுத்த உங்கள் அனைவரும் நன்றியும் பாராட்டுக்களும்.
உங்களின் கோரிக்களை கனிவுடன் இந்த அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும். ஒப்பந்த முறை மாற்றம், கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்வதில் ஏற்படும் பிரச்சனைகள், அதற்காக ஏற்படும் கூடுதல் செலவினம், பேக்கேஜ் முறை ஒப்பந்தத்தில் ஏற்படும் பாதிப்பு, கம்பி மற்றும் சிமெண்ட் விலையேற்றத்தால் ஏற்படும் நஷ்டம் போன்ற உங்களின் கோரிக்கைகள் அதிகாரிகளிடம் கலந்து பேசி, முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" எனத் தெரிவித்தார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!