Tamilnadu
தொடர்ந்து குறைந்துவரும் தொற்று எண்ணிக்கை... இன்று 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு! #CoronaUpdates
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 8,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சிகளால் தமிழ்நாட்டில் கடந்த 28 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
தொடர்ந்து பாதிப்பு அதிகமாக இருந்துவந்த கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,63,649 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,06,497 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 19,860 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,86,653 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில் 89,009 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 287 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 145 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 142 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 30,835 ஆக உள்ளது.
Also Read
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
”எங்கள் வெற்றியைத் தடுப்பதற்கு எந்த சக்தியாலும் முடியாது” : அமைச்சர் ரகுபதி பேட்டி!