Tamilnadu

“எத்தனை அலை வந்தாலும் அதை தமிழ்நாடு அரசு சமாளிக்கும்” - அமைச்சர் அன்பரசன் நம்பிக்கை!

தமிழக அரசு தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபமாக சிகிச்சை பெற பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களை அமைத்து வருகின்றது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 200 படுக்கைகள் கொண்ட கொரோனா மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ பெரும்புதூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் ஊரக தொழில் துறை அமைச்சருமான த.மோ.அன்பரசன் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை அவர்களின் பெருமுயற்சியால் இந்த ஆக்சிஜன் வசதியோடு கூடிய கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் காமேஷ் பாலாஜி மற்றும் குன்றத்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் படப்பை ஆ. மனோகரன் ஸ்ரீ பெருமந்தூர் தெற்கு வடக்கு ஒன்றிய செயலாளர்கள் நா. கோபால், எஸ் டி கருணாநிதி, மாநில காங்கிரஸ் எஸ்சி துணைத் தலைவர் இரா. ஐயப்பன் மற்றும் ஏராளமான திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

படிப்படியாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தோற்று குறைந்து வரும் நிலையில் முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கொரோனா மூன்றாவது அலை அல்ல வேறு எந்த அலை வந்தாலும் அதையும் சமாளிக்கும் வகையில் தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்யும் வண்ணம் ஸ்ரீபெரும்புதூர் அறிஞர் அண்ணா அரசு பொது மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய படுக்கை உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து வைத்துள்ளோம் என்று கூறினார்.